சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், கே எஸ் ரவிக்குமார், ராதாரவி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாயோன்.’ படத்தை டபுள் மீனிங் புரடக்சன் நிறுவனத்தின் அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசை இளையராஜா! இந்த படம் ஜூன் 24-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் டீசர் மிகவும் வித்தியாசமான முறையில் பார்வையற்றவர்களுக்கு பிரத்தியேகமான ஆடியோ வடிவில் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் திரையரங்குகளில்ம், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் விக்ரம் படத்துடன் 500க்கும் மேலான திரையரங்குகளில் மாயோன் படத்தின் டிரெய்லர் வெளியாகிறது.
மேலும் இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், தசாவதாரம் படத்தில் கடவுள் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என கமல் வசனம் பேசி இருந்த நிலையில் அவருடைய அந்த வசனத்திற்கு 14 வருடங்களுக்கு பிறகு மாயோன் படத்தில் பதில் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதனால், மாயோன் திரைப்படம் சொல்ல வருவது என்ன? படத்தில் அப்படி என்ன பதில் இருக்கிறது என்பது குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.