மின்னல் முரளி சிபுவாக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த குரு சோமசுந்தரம், குரு பிரம்மாவாக பெல் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள்.
முக்கிய ரகசியமொன்றை பன்னெடுங்காலமாக பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற்ற தனிநபரின் கதையே பெல்.
ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டு 60 நாட்களில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு வெயிலோன் கதை வசனம் எழுத, திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் ஆர். வெங்கட் புவன்.
ராபர்ட் இசையமைத்திருக்கிறார். பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பரணிகண்ணன்.
புரோகன் மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.