Home சினிமா மாதவன் நடித்துள்ள ’லெகஸி’யை 2026 ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்திய நெட்ஃபிலிக்ஸ்!

மாதவன் நடித்துள்ள ’லெகஸி’யை 2026 ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்திய நெட்ஃபிலிக்ஸ்!

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ’லெகஸி’ களத்தையும் அதன் குழுவினரையும் 2026ஆம் ஸ்லேட் ஷோகேஸில் அறிமுகப்படுத்தியுள்ளது நெட்ஃபிலிக்ஸ்.

வீழ்ச்சியை சந்தித்த வயதான கேங்க்ஸ்டரான பெரியவர் தனது அதிகாரத்தையும், குடும்பத்தையும் குறிப்பாக தனது பாரம்பரிய மரபையும் மீட்டெடுக்க வருகிறார்.

‘லெகஸி’ அணியினர் பகிர்ந்து கொண்டதாவது, ”’லெகஸி’ எங்கள் அனைவருக்கும் மிக முக்கியமான சாப்டர். அதிகாரம், வெற்றி மற்றும் உணர்வுப்பூர்வமான பல விஷயங்களை எங்கள் கதாபாத்திரத்தின் மூலம் ஆழமாக உணர்ந்து நடித்தோம். குற்ற உலகத்தை பின்னணியாக கொண்ட இந்தக் கதையில், விட்டு சென்ற பாரம்பரியத்தின் மரபு தனது எதிர்காலத்திற்காக ஆசை, விசுவாசம் மற்றும் குடும்ப உறவுகளுடன் எப்படி மோதுகிறது என்பதை இந்த கதை பேசும். இந்தக் கதையை படமாக்க பிரமாண்டமும் கூட்டு முயற்சியும் அவசியமாக இருந்தது. அந்த நம்பிக்கையை கொடுத்து இந்த பயணத்தை சாத்தியமாக்கிய நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கு நன்றி. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் 2026 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள ‘லெகஸி’ உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை பிரம்மாண்டமாக சென்றடையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்