Home சினிமா இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து உருவான ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி...

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து உருவான ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள
‘தருணம்’ என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இன்றைய GenZ  தலைமுறை உலகத்தை மையமாக வைத்து, அசோக்குமார் கலைவாணி இயக்கியிருக்கும் ‘நீ Forever’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க,  மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் சென்னையின்  இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20  முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா கைப்பற்றியுள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்