இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘ரீல்ஸ்’ பார்த்து கண்டறிந்த ஆராத்யா தேவி நடிக்கும் ‘சாரி’ நவம்பரில் வெளியாகிறது!

நிஜ வாழ்க்கை சம்பவங்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான சைக்காலஜிக்கல் த்ரில்லராக, ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாரி.’ ’SAAREE’ (Log Line – Too much love can be scary)

கதாநாயகனாக சத்யா யாது, கதாநாயகியாக ஆராத்யா தேவி நடித்துள்ளனர். முன்பு ஸ்ரீலக்ஷ்மி என்று அழைக்கப்பட்ட ஆராத்யா தேவி கேரளாவைச் சேர்ந்தவர்.

சேலை அதாவது சாரி அணிந்த ஒரு பெண்ணின் மீது தீரா அன்பு வைத்திருக்கும் ஒருவன் அவளைப் பின்தொடர்ந்து தொல்லை தருகிறான். ஒருக்கட்டத்தில் அதுவே ஆபத்தாக மாறுகிறது. இதுதான் ‘சாரி’ படத்தின் கதை.

படம் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் நவம்பர் மாதம் வெளியாகிறது.

’RGV DEN’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலமாக இந்த படத்திற்காக சத்யா யாது, ஆராத்யா தேவி இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சமூகவலைதளங்களிலிருந்து ஒருவர் அனுப்பிய ரீல்ஸ் மூலமாக ஆராத்யா தேவியை இயக்குநர் ராம் கோபால் வர்மா கண்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here