Home சினிமா மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும்  ‘நாங்கள்’ ஏப்ரல் 18-ல் ரிலீஸ்!

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும்  ‘நாங்கள்’ ஏப்ரல் 18-ல் ரிலீஸ்!

திரைப்படக் கல்லூரியில் முறையாக படத்தொகுப்பு, திரைக்கதை அமைப்பு மற்றும் இயக்கம் உள்ளிட்டவற்றை பயின்று எண்ணற்ற விளம்பரப் படங்களில் பணியாற்றியிருக்கும் அவினாஷ் பிரகாஷ் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘நாங்கள்.’

மூன்று குழந்தைகளின் உணர்ச்சிப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான‌ ‘நாங்கள்’, ராட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி, மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ரா குழுவினரை பயன்படுத்தி வேத் ஷங்கர் சுகவனம் இசையமைத்துள்ள ‘நாங்கள்’ திரைப்படம் லைவ் சவுண்ட் முறையில் முழுக்க படமாக்கப்பட்டிருக்கிறது

படத்தை இயக்கியிருக்கும் அவினாஷ் பிரகாஷ் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார்.

இந்த படம் படம் ஏப்ரல் 18 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்’ எஸ் சுப்பையா வெளியிடுகிறார்.

படம் குறித்து பேசிய இயக்குநர் அவினாஷ் பிரகாஷ், “பெற்றோர் பிரிந்து வாழும் நிலையில் மிகவும் கண்டிப்பான தந்தையிடம் வளரும் மூன்று குழந்தைகள் வாழ்க்கையை எவ்வாறு கற்று கொள்கிறார்கள் என்பது தான் கதைக்கரு. படம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக அமைந்திருப்பதாக இதுவரை பார்த்த அனைவரும் மனமார பாராட்டி இருக்கிறார்கள். திரையரங்குகளில் வெளியாகும் போது ரசிகர்களும் வரவேற்பார்கள் என நம்புகிறேன்.

மிதுன் வி, ரித்திக் எம், நிதின் டி ஆகியோர் மூன்று குழந்தைகளாக நடிக்க, அப்துல் ரஃபே மற்றும் பிரார்த்தனா எஸ் அவர்களின் பெற்றோராக நடித்துள்ளனர். முக்கிய பாத்திரத்தில் ராக்ஸி எனும் நாய் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்” என்றார்.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ மற்றும் ‘அழகு குட்டி செல்லம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த‌ வேத் ஷங்கர் சுகவனம் ‘நாங்கள்’ படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ ஆர் ரஹ்மான் பயிற்றுவித்த துபாயை சேர்ந்த ஃபிர்தவுஸ் ஆர்கெஸ்ட்ராவை அவர் பயன்படுத்தியுள்ளார். வேத் ஷங்கர் சுகவனம் இசையில் சுஜாதா நாராயணன் பாடல் வரிகளில் சைந்தவி பாடியுள்ள கனவே எனும் உள்ளத்தை தொடும் பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்