நிகழ்வில் நடிகர் உதயநிதி ஸ்டாலின், மனதுக்கு நேர்மையான படத்தை கொடுத்துள்ளோம். அதற்கு நீங்கள் கொடுத்த பாராட்டிற்கு நன்றி. எனக்கு எந்தவிதமான கஷ்டம் இல்லாமல் படம்பிடித்த ஒளிப்பதிவாளருக்கு நன்றி. கலை இயக்குனருடைய பணி எல்லாராலும் பாராட்டப்பட்டது. சுரேஷ் சக்கரவர்த்தியுடைய கதாபாத்திரம் தான் இந்த படத்தின் உயிர். வசனகர்த்தா தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தில் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். நடிகர் இளவரசு உடன் நடித்தது மகிழ்ச்சி. படம் பார்த்தபிறகு தான் படத்தில் ஆரி தான் ஹீரோ என்று தெரிந்தது. படத்தின் இயக்குனர் படத்தை தமிழுக்கு தகுந்தாற்போல் மாற்றியுள்ளார். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவர் தான். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றி அருண் மற்றும் அவரது மனைவிக்கு சமர்ப்பணம்” என்றார்.
நிகழ்வில் நடிகர் மயில்சாமி, உதயநிதியுடன் இது எனக்கு ஐந்தாவது படம். படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் உதயநிதிதான். என் கதா பாத்திரத்தை முதலில் செய்ய இருந்தவர் பொன்வண்ணன் தான். சில காரணங்களால் அவர் நடிக்க முடியவில்லை. படத்தில் காமெடி மயில்சாமி கதாபாத்திரமாக இருக்க கூடாது, சீரியஸான மயில்சாமி வேண்டும் என இயக்குனர் கூறினார். படத்தில் நான் பேசிய வசனங்களுக்கு மக்கள் பாராட்டு தர காரணம் எழுத்தாளர் தமிழ். அவர் வசனங்களை மிகுந்த சிரத்தை எடுத்து உருவாக்கினார். இந்த படம் நல்ல பெயர் வாங்கி தந்துள்ளது” என்றார்.
நடிகர் இளவரசு, படத்தின் பெரிய பலத்தில் ஒரு பலம் கலை இயக்குனர். இந்த படத்தில் சுரேஷ் ஒரு காட்சியில் எல்லோரையும் தாண்டி நடித்தார். என் கதாபாத்திரத்தை அருண்ராஜா வடிவமைத்த விதம், எனக்கு மன அழுத்தத்தை கொடுத்ததது. அந்த அளவு அந்த கதாபாத்திரம் அவ்வளவு சிக்கலை சந்திக்கும் என்பதை வெளிகாட்டி இருந்தது. தம்பி உதயநிதி இந்த படத்தில் கொடுத்த நடிப்பிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குனர் அருண்ராஜா காமராஜ், இந்த படத்தை இயக்க நான் சரியான நபர் என என்னை தேர்ந்தெடுத்த உதய்நிதிக்கு நன்றி. உதய் எனக்கு இந்த படத்தில் முழு சுதந்திரம் கொடுத்தார். கனா படத்தில் நான் புதுமுகங்களை பயன்படுத்தியது போல், இந்த படத்திலும் இருக்க வேண்டும் என உதய்நிதி கூறினார். இந்த படத்தில் வசனகர்த்தா தமிழ் பெரும் உழைப்பை கொடுத்துள்ளார். இந்த படம் சமூகநீதி பேசும் படம், அதற்காக தான் நாங்கள் அனைவரும் உழைத்துள்ளோம். நெஞ்சுக்கு நீதி என்ற தலைப்பு இந்த படத்திற்கு பொருத்தமான ஒன்று. அதை வாங்கிகொடுத்த உதயநிதிக்கு நன்றி. உதவி இயக்குனர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். படத்தின் வெற்றிக்கு ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உடைய பங்களிப்பு முக்கியமானது. இந்த படத்திற்கு பத்திரிகையாளர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. என்னுடைய மனைவிக்கு நன்றி. இந்தப்படத்தை செய்ய அவர் தான் தூண்டுகோலாக இருந்தார்” என்றார்.