‘நித்தம் ஒரு வானம்’ படம் பார்ப்போர் புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேறும் படியாக இருக்கும்! -இயக்குநர் ரா. கார்த்திக் உறுதி

அசோக்செல்வன், தனது சமீபத்திய படங்கள் மூலம் வெற்றி நாயகனாக மாறியிருக்கிறார். அவரது அடுத்த படம் ‘நித்தம் ஒரு வானம்’.

படத்தை இயக்கியிருக்கும் ரா. கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது போன்ற பயணம் தொடர்பான படங்கள் அரிதாகதான் வரும். அந்த வகையில் ‘நித்தம் ஒரு வானம்’ நிச்சயம் உணர்வைத் தொடக் கூடிய படமாக இருக்கும். மூன்று வித்தியாசமான நிலபரப்பில் மூன்று வித்தியாசமான உணர்வுகளை இதில் கொடுத்திருக்கிறோம். காட்சிகள் சென்னை, சண்டிகர், மணாலி, கோபிச்செட்டிப்பாளையம் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் நிறைய கதாநாயகிகள் இருந்தாலும் , இது ஒரு காதல் கதை போன்ற தோற்றத்தைக் கொடுத்தாலும் அதையெல்லாம் தாண்டி இந்த படம் நம் வாழ்வின் தருணங்களை கொண்டாடும் வகையில் இருக்கும்.

அசோக்செல்வன் தன்னுடைய சிறப்பான நடிப்பை இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார். கதாநாயகிகள் ரித்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜ்சேகர் மூவருக்கும் சமமான கதாபாத்திர முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மூவரும் சிறப்பாக செய்துள்ளனர். அவர்களது கதாபாத்திரம் அனைத்து வயதுப் பெண்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

நிறைய பாசிட்டிவான விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளோம். எப்போதெல்லாம் நாம் சோர்வாகவோ அல்லது மன அழுத்தமாகவோ உணர்கிறோமோ அப்போது பயணம் செல்வது நம்முடைய எண்ணங்களை நேர்மறையாக்கும். திரையரங்குகளுக்கு படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் படம் முடித்து வெளியேறும் போது புத்துணர்ச்சியோடும் புன்னகையோடும் வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்” என்றார் உற்சாகமாக.
படக் குழு:
இசையமைப்பாளர்: கோபி சுந்தர்,
ஒளிப்பதிவு: விது அய்யனா,
எடிட்டிங்: ஆண்டனி,
கலை: கமல் நாதன்,
பாடலாசிரியர்: கிருத்திகா நெல்சன்,
நடன இயக்குநர்: லீலாவதி குமார்,
நிர்வாகத் தயாரிப்பு: S. வினோத் குமார்,
ஒலிக்கலவை: T. உதயகுமார்,
உடை வடிவமைப்பாளர்: நவதேவி ராஜ்குமார்,
சண்டை பயிற்சி: விக்கி,
படங்கள்: ஷேக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா (D’One),
விளம்பர வடிவமைப்பு: ஏஸ்தெடிக் குஞ்சம்மா,
புரொடக்‌ஷன் எக்ஸிகியூட்டிவ்: G கண்ணன்,
நிர்வாகக் கட்டுப்பாடு: மோகன் கணேசன்,
விஷூவல் புரோமோஷன்ஸ்: Feed Of Wolf

படத்தின் ஸ்டில்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here