கவுண்டமணியோடு யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை… காமெடி சரவெடியாய் தயாராகும் ‘ஒத்த ஓட்டு முத்தையா.’

கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்க, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திரங்கள் களமிறங்கும் படம் ‘ஒத்த ஓட்டு முத்தையா.’

கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்கும் இந்த படத்தில் நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி, நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக், நாகேஷின் பேரன் கஜேஷ் என பிரபலங்களின் வாரிசுகள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கவிருக்கிறார்கள். கவுண்டமணியின் ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார்.

‘எதிர்நீச்சல்’ ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், “கிட்டத்தட்ட 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை, இணை இயக்குநராக பணியாற்றியுள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோருடனும் பணியாற்றியுள்ளேன். எனது 25 ஆண்டுகால திரையுலகப் பயணத்தில் பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’, ‘பாய்ஸ்’ மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் ‘கிச்சா வயசு 16’ ஆகிய படங்களை இயக்கியுள்ளேன்.

‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதித்தார். இந்த படம் ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவைப் படமாக இருக்கும்” என்றார்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு -ஹெக்டர் ஸ்ரீதர்
கலை இயக்கம் – மகேஷ் நம்பி
படத்தொகுப்பு – ராஜா சேதுபதி
இணை இயக்கம் – பி ஜி துரை, தீனா, மணிவண்ணன்
தயாரிப்பு மேலாளர் – ராஜன்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here