சமீபத்திய ப்ரீ வெட்டிங் ஷோ படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, இளம் நடிகர் திரு வீர், மற்றும் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெறர சம்கிராந்திகி வஸ்துன்னாம் படத்தில் அற்புதமாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்துக்கு ஓ சுகுமாரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
டைட்டில் அறிவிப்பு போஸ்டர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீல நிற இதயத்தை எழுதியபடி அதனை இரண்டு பாகங்களாகப் பிளக்கும் ஆரஞ்சு மின்னல் குறியீடு, பின்னணியில் பெரிய ஆலமரம், கிராம சூழல், ஓடிக்கொண்டிருக்கும் கிராமவாசிகள், இவை அனைத்தும் சேர்ந்து இப்படம் காதல், எமோசன், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட கதை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

