அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், புலனாய்வு திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் படம் ‘போர் தொழில்.’ இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் காவலர்களாக நடித்திருக்கும் அசோக் செல்வன் மற்றும் சரத்குமாரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
போர் தொழில் தொடர் கொலைகளை நிகழ்த்தும் குற்றவாளியை பிடிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு இளம் காவலரைப் பற்றிய கதை. இதில் அந்தக் காவலர், மூத்த காவலர் ஒருவருடன் கூட்டணி அமைத்து புலனாய்வு செய்து குற்றவாளியை நெருங்குகிறார். ஆக்சன், சஸ்பென்ஸ் என சுவராசியத்திற்கு குறைவில்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் தயாராகி இருக்கும் இந்த படம், தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று தனி முத்திரையைப் பதிக்கும் என நம்பிக்கை தருகிறது படக்குழு.

E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ் மற்றும் எப்ரியஸ் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இந்த படத்தை தயாரித்திருப்பதன் மூலம் தமிழ் திரையுலகில் பிரமாண்டமாக தடம் பதித்துள்ளது.