மூன்று தோற்றங்களில் சிபி சத்யராஜ்! பூஜையுடன் துவங்கியது புதிய படம்!

சிபி சத்யராஜ் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கும் ‘புரொடக்சன் நம்பர் 1’ என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தின் பட படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கியது.

இப்படத்தில் திலீபன் (வத்திக்குச்சி புகழ்), கஜராஜ், ஆடுகளம் முருகதாஸ், ராஜ் அய்யப்பா (வலிமை), பழைய ஜோக் தங்கதுரை, விஜய் டிவி குரேஷி மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Latha Babu & Durgaini of Duvin studios private limited சார்பில் தயாரிப்பாளர்கள் லதா பாபு & துர்க்கைனி தயாரிப்பில், இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.

இளையராஜா கலியபெருமாள்இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர், வினோத் DL ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் சிபி சத்யராஜுக்கு ஜோடி கிடையாது. பதிலாக 25 முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றி நகரும் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும்!

இந்த படத்தின் காட்சிகளை, சென்னையின் சில நெடுஞ்சாலைகள் மற்றும் சென்னை மாநகரின் பல இடங்களில் ஒரே கட்டமாக படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது!

படக்குழு:-
ஒளிப்பதிவு- கார்த்திக் வெங்கட் ராமன்
இசை- சுந்தரமூர்த்தி KS
கலை – அருண் சங்கர் துரை
ஸ்டண்ட்ஸ்- சக்தி சரவணன்
எடிட்டிங் – லாரன்ஸ் கிஷோர்
ஸ்டில்ஸ் – ராஜ்
பாரதிராஜா – எக்ஸிகியூட்டிவ் மேனேஜர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here