Home சினிமா மலையாளத் திரையுலகில் நுழையும் சாய் அபயங்கர்… ஷேன் நிகாமின் ‘பல்டி’ படத்திற்கு இசையமைக்கிறார்!

மலையாளத் திரையுலகில் நுழையும் சாய் அபயங்கர்… ஷேன் நிகாமின் ‘பல்டி’ படத்திற்கு இசையமைக்கிறார்!

ஆல்பம் பாடல்களான ‘கச்சி சேரா’, ‘ஆச கூடா’, ‘சித்திர புத்திரி’ போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான ‘பல்டி’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில், பெரும் பொருட்செலவில், பிரமாண்டமாக உருவாகவுள்ளது.

சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. வீடியோவின் முடிவில் “பல்டி ஓணம்” எனும் வாழ்த்தும், சாய் அபயங்கரின் பெயர் பொறித்துள்ள “பல்டி ஜெர்ஸி”யுடன் மோகன்லாலின் வாழ்த்தும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

சாய் அபயங்கர் பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யூட்யூபில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்த அவரது ஆல்பம் பாடல்கள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இப்போது மலையாள சினிமாவில் கலக்கலாக கால் பதித்திருக்கும் சாய், தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வருகிறார். முன்னணி நட்சத்திரங்களின் படங்களான ‘சூர்யா 45’ (சூர்யா நடிப்பில்), ‘ STR 49 ‘ (சிலம்பரசன் நடிப்பில்), ‘டூயூட்’- DUDE ‘(பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்), லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்