விஜய்காந்தின் மகன் நடிக்கும் படை தலைவனில் 5 நிமிடங்கள் நடித்த ராகவா லாரன்ஸ்!

‘படை தலைவன்’ பட இயக்குநர் ஊடகங்களுக்கு அளித்திருக்கும் செய்தி இது:- 

புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார்.

இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன். எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார்.

இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம்.கேப்டன் அவர்கள் மேல் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது..மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4, ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , மக்களுக்கு தெரியப் படுத்துவதில், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here