இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தெரிவிக்க மீண்டும் வருகிறது புதிய தலைமுறையின் தேர்தல் சிறப்பு பேருந்து…

அடுத்த 5 வருடங்கள் இந்திய நாட்டின் தலை எழுத்தைத் தீர்மானிக்கும் நேரமிது. ஒட்டுமொத்த இந்தியர்களும் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு தங்களின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறியும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்தியத் தேர்தலின் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையின் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒவ்வொரு தொகுதிக்கும் பிரத்யேக செய்தியாளர் குழுவை நியமித்து உடனுக்குடன் தேர்தல் செய்திகளை வழங்கியது புதிய தலைமுறை. தேர்தல் சிறப்பு பேருந்து மூலம் 40 தொகுதிகளிலும் மக்களோடு மக்களாக களத்தில் இறங்கி தேர்தல் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினோம். இது தமிழக மக்களிடம் வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது…

தேர்தல் பெருவிழாவின் மெகா முடிவுகள்…

ஜூன் 4, 2024 அன்று மாபெரும் ஜனநாயகப் பெருவிழாவின் முடிவுகள் வெளிவர இருக்கின்றன… ஒவ்வொரு தொகுதியின் வாக்காளர்கள், அவர்களின் வெற்றி வாய்ப்புகள், வாக்கு எண்ணிக்கையின் நொடிக்கு நொடி நிலவரம் மற்றும் வெற்றி தோல்விக்கான காரணங்கள் என்னவென்று அலசி ஆராய்ந்து, தேர்தல் முடிவு நாள் முழுக்க பிரத்யேக ஒளிபரப்புக்கு தயாராகி வருகிறது புதிய தலைமுறை…

40 தொகுதிகளுக்கும் 40 செய்தி அணிகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து செய்தி சேகரிக்கும் அணிகள் என்று 500-க்கும் மேற்பட்ட நபர்கள் வாக்கு எண்ணிக்கை நாளன்று பணியாற்றவிருக்கின்றனர். ஜூன் 4, செவ்வாய் அதிகாலை 5 மணி முதலே புதிய தலைமுறையின் தேர்தல் சிறப்பு நேரலை ஆரம்பிக்க இருக்கிறது!

மீண்டும் தேர்தல் சிறப்பு பேருந்து…

மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற தேர்தல் சிறப்பு பேருந்து மீண்டும் ஜூன் 4 அன்று சென்னை முழுக்க வலம் வர இருக்கிறது. இதனுடன் லைவ் டிவியும் இருப்பதால் தேர்தல் முடிவுகளை மக்கள் அவ்வப்போது கண்டறிய முடியும். அதிகாலை 5 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இருந்து பேருந்து புறப்பட இருக்கிறது!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here