தம்பி ராமையாவின் மகனான உமாபதி ராமையா மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்த, அவருடன் பால சரவணன், தம்பி ராமையா, வித்யூலேகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பித்தல மாத்தி’ திரைப்படம் ஜூன் 14-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
மாணிக வித்யா இயக்கத்தில் இந்த கால காதலை மையப்படுத்தி காமெடி கலந்த படைப்பாக, ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவான இந்த பித்தல மாத்தி’ சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என உறுதியாய் சொல்கிறார்கள் படக்குழுவினர்.