‘சூரியன்’, வசந்தகாலப் பறவை’, இந்து’, ஐ லவ் இந்தியா’, திருமூர்த்தி’, கல்லூரி வாசல்’ உள்ளிட்ட பிரமாண்டமான வெற்றிப் படங்களை இயக்கியவர் பவித்ரன்.
இவர் தற்போது, தமிழில் வெற்றி பெற்ற ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் கதையை கன்னடத்தில் கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார். முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்துள்ளார். கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்துள்ளார்.
முன்னணி இசையமைப்பாளர் அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார். இந்த படம், திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னடத் திரை உலகினரை தன் வசம் இழுத்திருக்கிறார் பவித்ரன்.