Home சினிமா மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணைந்த பைசன் திரைப்படத்திற்கு Letterboxd விமர்சன தளத்தில் சர்வதேச...

மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் இணைந்த பைசன் திரைப்படத்திற்கு Letterboxd விமர்சன தளத்தில் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன் / அட்வெஞ்சர் திரைப்படங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே தமிழ்த் திரைப்படம் இது.

வலுவான கதையமைப்பு, தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான திரைக்கதை மூலம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள பைசன் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக Letterboxd பயனர்களிடமிருந்து கிடைத்த உயர்ந்த மதிப்பீடுகள், இந்த திரைப்படத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துகின்றன.

சர்வதேச அளவிலான இந்த அங்கீகாரம், படக்குழுவிற்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது.

https://x.com/letterboxd/status/2010809541567623222?s=20

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்