Home சினிமா போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் ஒரு காதல் கதை… மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன்...

போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில் ஒரு காதல் கதை… மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1

இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் 1’ பெயரிட்டு பூஜையுடன் துவங்கியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைக்களம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகிறது.
இயக்குனரும், நடிகருமான ஏ வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில் நடிக்கிறார். அருவி மதன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஸ்ரீஜா ரவி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தணிகை, மற்றும் பல புதிய முகங்கள் அறிமுகம் ஆகிறார்கள்.
முதல்கட்ட படப்பிடிப்பு 05-02-26 அன்று சென்னையில் ஆரம்பமானது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் நடக்கவுள்ளது.
Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிக்கும் இப்படத்திற்கு கிரி மர்ஃபி ஒளிப்பதிவு செய்கிறார். புதுமுக இசையமைப்பாளர் ஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் விரைவில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்