நடிகர் சந்தானத்தின் மைத்துனர் தயாரிக்கும் முதல் படம்! இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் காமெடி ஜானரில் உருவாகிறது!

முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும்படியாக ஒரு திரைப்படம் உருவாகவிருக்கிறது.

நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் மைக்செட் ஶ்ரீராம் தை நாயகனாக அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்கவிழா திரைப் பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு, 4you கம்பெனி நிறுவனர் ஆர். பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவினை தொடந்து, படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இசையமைப்பாளர் – அருள்ராஜ் கென்னடி

ஒளிப்பதிவு – முத்து மூவேந்தர்

கலை இயக்கம் – P.S.ராபர்ட்

மக்கள் தொடர்பு – பரணி அழகிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here