‘பட்டத்து அரசன்’ ஆகிறார் அதர்வா முரளி! சற்குணம் இயக்கும் படத்தில் கெத்தான வேடம்!

வித்தியாசமாக கதைகளை பிரமாண்ட திரைப்படங்களாக தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்தாக சற்குணம் இயக்கத்தில், அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் ‘பட்டத்து அரசன்’ என்ற படத்தை தயாரிக்கிறது. ‘சண்டிவீரன்’ படத்திற்குப் பிறகு அதர்வா முரளி, இரண்டாவது முறையாக இந்தப் படத்தின் மூலம்  இயக்குநர் சற்குணத்துடன்  இணைகிறார்.
நடிகை ஆஷிகா ரங்கநாத் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ராதிகா சரத்குமார், ஆர்.கே. சுரேஷ், ராஜ் அய்யப்பா, ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, பால சரவணன், ஜி.எம். குமார், துரை சுதாகர், கன்னட நடிகர் ரவி காளே, தெலுங்கு நடிகர் சத்ரு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுப்படுகை மற்றும் ஆட்டுப் பண்ணை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.  அனைத்து வயதினருக்கும் பிடித்த வகையில் குடும்பத்தோடு பார்க்கும் வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட கதையாக நிச்சயம் இது இருக்கும்’ என்கிறது படக்குழு.

தொழில்நுட்பக் குழு:-

இசை: ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: ‘உஸ்தாத் ஹோட்டல்’ புகழ் லோகநாதன் ஸ்ரீனிவாஸ்,
எடிட்டிங்: ராஜா முகமது,
கலை இயக்கம்: ஆண்டனி,
பாடல் வரிகள்: விவேகா- மணி, அமுதவன். A, சற்குணம்,
ஆடை வடிவமைப்பு: நடராஜ்,
ஒப்பனை: சசி குமார்,
சண்டைப் பயிற்சி: கனல் கண்ணன்,
நடனம்: பாபி ஆண்டனி- ஷெரிஃப்,
தயாரிப்பு மேலாளர்: எம். கந்தன்,
படங்கள்: மூர்த்தி மெளலி,
எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: சுப்பு நாராயணன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா- ரேகா (D’One)
தயாரிப்பு மேற்பார்வை – லைகா புரொடக்‌ஷனின் தலைமை நிர்வாகி G.K.M. தமிழ்க்குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here