துவங்கியது சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்! லோகேஷ் கனகராஜிடம் பணியாற்றியவர் இயக்குகிறார்!

சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘புரொடக்‌ஷன் No 3’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிய வெங்கி தனது முதல் படமாக இயக்குகிறார்.அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’, நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ‘ரிபீட்’ (தெலுங்கு) வெற்றிப் படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிக்கும் அடுத்த படம் இது.இந்த படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் டிரைடன்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித், தயாரிப்பாளர், எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன், பி.வி.ஆர். சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, வழக்கறிஞர் தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:-
யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள VBR இசையமைக்கிறார்.
இணை தயாரிப்பு – முரளி கிருஷ்ணன்
படத்தொகுப்பு – சித்தார்த்
கலை இயக்குனர் – ஜி.துரைராஜ்
காஸ்டியூம் டிசைனர் – கிருத்திகா சேகர்
மக்கள் தொடர்பு – சதிஷ் – சதிஷ் குமார் (AIM)
பப்ளிசிட்டி டிசைன்ஸ் – தண்டோரா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here