சமூகப் பாதுகாப்பு மாநாட்டை நடத்தவிடாமல் தடுப்பதா? -திமுக அரசின் முஸ்லீம் விரோதப் போக்கிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம்!

வரும் ஜூலை 24-ம் தேதி சென்னையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நடைபெற உள்ள “மக்களாட்சியை பாதுகாப்போம் – மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாடு” தொடர்பான அவசர பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று 22.07.2022 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைமையகத்தில் மாநில துணைதலைவர் ஹாலித் முஹம்மத் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய ஹாலித் முஹம்மத், மக்களாட்சியின் மகத்துவங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாகவும், மக்களாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 வரை மக்களாட்சியை பாதுகாப்போம் தேசிய பிரச்சாரம் நடைபெற்று வருகின்றது.இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சென்னையில் ஜூலை 24-ம் தேதி மாபெரும் சமூக பாதுகாப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

வருட பாஜக ஆட்சியில் நம் தேசம் சொல்லனா துயரங்களை சந்தித்து வருகின்றது.நம் தேசத்தின் அடிப்படையாக இருக்கக் கூடிய மக்களாட்சி தத்துவம் ஜனநாயகம் அரசியலமைப்பு சாசன சட்டம் நீதி பரிபாலன முறை போன்றவை கடும் பிரச்சனையை சந்தித்து வருகின்றது.தேசத்தின் அடிப்படை தத்துவங்களை மாற்றி பாசிச சர்வாதிகார கொள்கையை ஆளும் பாஜக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.ஜனநாயக அமைப்புகளும் உரிமைக்காக போராடக்கூடிய.தலைவர்களும் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க கூடிய அவலம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.எனவேதான் தேசத்தின் அனைத்து அடிப்படை தத்துவங்களும் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃபரண்ட் இந்த மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்கு 6/7/2022 அன்றே முறையாக அனுமதி கேட்டு அனுமதி கடிதம் சென்னை மாநகர காவல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. முதலில் பூந்தமல்லி ரோட்டில் இருக்கக்கூடிய செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் வைத்து மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருந்தோம்.இட உரிமையாளரிடம் பாப்புலர் ஃப்ரண்டின் நிகழ்ச்சிக்கு நீங்கள் இடம் தர கூடாது என மிரட்டி செயின்ட் ஜார்ஜ் பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சி நடத்துவதற்கு கொடுத்த அனுமதியை சென்னை மாநகர காவல் துறை ரத்து செய்ய வைத்துள்ளது.

அதன் பின்பு வேறு சில இடங்களை தீர்மானித்து மீண்டும் கடந்த 18/7/2022 அன்று அனுமதி கடிதம் காவல்துறையிடம் கொடுக்கப்பட்டது. மாநாட்டு நிகழ்ச்சிக்கு அனுமதியை இப்பொழுது வரை தராமல் சென்னை மாநகர காவல் துறை அலைக்கழித்து வருகின்றது.

தமிழகத்தின் அமைதிக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும் எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் BJP மற்றும் இந்து முன்னணி போன்ற பாசிச சங்கப் பரிவார இயக்கங்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கும்,ஊர்வலத்திற்கும் எந்த மறுப்புமின்றி அனுமதி கொடுத்து வரும் தமிழக காவல்துறை, தேசத்தின் அடிப்படை தத்துவங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி நடத்தக்கூடிய பாப்புலர் ஃப்ரண்டின் மாநாட்டிற்கு அனுமதி தர மறுப்பது ஏன்?

தமிழகத்தில் நாங்கள் நல்லாட்சி செய்து வருகின்றோம் இது திராவிட மாடல் ஆட்சி என கூறிவரும் திமுக அரசு முஸ்லிம்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிக்கு மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?ஜனநாயக உரிமைகளை பறித்து அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விடுவதுதான் திராவிட மாடல் அரசா?இது அப்பட்டமாக தமிழக அரசின் முஸ்லிம் விரோத போக்கு ஆகும்.

ஜனநாயக உரிமைகள் பறிக்கப் படுவதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாப்புலர் ஃப்ரண்டும் அதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. உரிமைகளை நிலைநாட்டக் கூடிய களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ச்சியாக முயற்சி செய்யும். தீர்மானித்தபடி எதிர்வரும் ஜூலை 24ஆம் தேதி சமூக பாதுகாப்பு மாநாடு சென்னையில் சிறப்பாக நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here