ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் படம் பெரியாண்டவர்.’ சிவனாக யோகிபாபு நடிப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இயக்குநர் கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் 9-வது படமாக இப்படத்தை தயாரிக்கிறது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டோம்… ”திடீரென பூமிக்கு வரும் சிவன், வழியில் ஒரு பெண்ணை சந்திக்கிறார். சிவனுக்கும் அந்த பெண்ணுக்கும் நடக்கும், நாட்டின் இன்றைய நடப்பு மற்றும் சுவாரஸ்யமான பேச்சுகள் தான் படத்தின் கதை. சீரியசான விஷயத்தை காமடி பாணியில் சொல்கிறோம், கதையில் சிவனை சந்திக்கும் பெண் கேரக்டரில் பெரிய ஹீரோயினை நடிக்க வைக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்றார்.