”பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருகிறது.
இப்படி நாடு முழுவதும் நடந்துவரும், இஸ்லாமிய மக்களுக்கெதிரான அடக்குமுறை, கைது நடவடிக்கை உள்ளிட்டவற்றைக் கண்டித்து ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் 22.9. 2022 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூடவே பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதையடுத்து இந்தியாவின், தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி தொலைக்காட்சிகளின் செய்தியாளர்களும், இணைய ஊடகத்தினரும் சூழ்ந்திருந்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா’வின் நிர்வாகிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருவதை கண்டித்து பேசினர். தமிழக ஆளுநரின் ஜனநாயக விரோதப் போக்கையும் கண்டித்தனர்.
அதையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’அலுவலகம் அமைந்துள்ள தெரு முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.