‘பொன்னியின் செல்வன்’ படம் எந்தளவுக்கு பிரமாண்டமோ அதேபோல் அந்த படத்தைக் கொண்டாட கொண்டாட பி.வி.ஆர். திரையரங்கங்கள் நிறுவனம் (PVR South Sales Team) அதிநவீன பேருந்துப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தது.
பட வெளியீட்டின் முதல் நாளில் வசந்த் & கோ நிறுவனத்தின் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிற நிகழ்வு நடந்தது. அன்று மாலை சென்னை நகரத்துக்குள் மற்றொரு ஃபன் டூர் ஒன்றை லலிதா ஜுவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிற நிகழ்வு நடந்தது.
இரண்டாம் நாளிலிருந்து 5-ம் நாள் வரை, 150+ வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் பிரதிநிதிகளுடன் உற்சாகமான நடைப்பயணம் இருக்கும்.
மட்டுமல்லாது இந்த பஸ் டூர் பி.வி.ஆர். சத்யம் சினிமாவில் தொடங்கி எங்கெல்லாம் பார்வையாளர்கள் ‘பொன்னியின் செல்வன் 1’ படத்தை பார்த்து கொண்டாடி அன்பை தருகிறார்களோ அங்கெல்லாம் செல்ல இருக்கிறது.
இந்த அதி நவீன பேருந்தில், படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களின் படங்களும் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
வசதியான அதி நவீன சொகுசு இருக்கைகள் (plush seats), கழிப்பறை, ஸ்நாக் பார் உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் பயணிப்பது இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு புதுமையான அனுபவத்தை கொடுப்பதாக இருக்கும்!



