அமேசான் பிரைம் வீடியோ தளமானதுவிரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான புத்தம்புது காலை விடியாதா (Putham Pudhu Kaalai Vidiyaadhaa…) படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.
5 அத்தியாயங்கள் கொண்ட இந்த தொகுப்பு பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14-ம் தேதி பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் வெளியாகவுள்ளது
கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந் மற்றும் டீஜே அருணாசலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், மேலும் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி மற்றும் சூர்யா கிருஷ்ணா ஆகியோரால் அவை இயக்கப்பட்டுள்ளன
மும்பை, இந்தியா – 4 ஜனவரி 2021 – மனதைக் கவரும் கதைகளின் அழகான தொகுப்பாகத் திகழும் தனது வரவிருக்கும் திரைப்படம் Putham Pudhu Kaalai Vidiyaadhaa….படத்தின் டிரெய்லரை வெளியிட்டது. இந்த 5-அத்தியாயங்களின் தொகுப்பானது, தொற்றுநோயின் இரண்டாம் கட்டத்தில் தேசத்தை வாட்டி வதைத்த துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை, மனவுறுதி மற்றும் மனித உத்வேகம் ஆகியவற்றின் கதைகளை மையமாகக் கொண்டுள்ளது. 5 வெவ்வேறு இயக்குனர்களால் இயக்கப்பட்ட Putham Pudhu Kaalai Vidiyaadhaa…வின் ஒவ்வொரு கதையும்… நட்சத்திரங்கள் நிறைந்த நடிகர்களுடன், தனித்துவமான குரல் மற்றும் திரைப்படத் தயாரிப்பின் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமேசான் ஒரிஜினல் சீரிஸ் ஜனவரி 14 அன்று பிரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் வெளியிடப்படவுள்ளது.
Putham Pudhu Kaalai Vidiyaadhaa… கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது லாக்டவுனில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகள் மற்றும் சவால்களின் பொதுவான தன்மையால் ஒன்றாக இணைக்கப்பட்ட 5 தனித்துவமான அத்தியாயங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைப்பும் – முகக்கவச முத்தம், லோனர்ஸ், நிழல் தரும் இதம், தி மாஸ்க், மௌனமே பார்வையாய் ஆகியவை நெகிழ்ச்சி மற்றும் மனச்சோர்வின் உணர்வை அழகாகத் தெரிவித்து, நம்பிக்கையின் கீற்றுடன், புதிய விடியலை நோக்கி நம்மை பயணிக்கச் செய்கிறது.