வெள்ளி விழா காணும் ஓய்வுபெற்ற காப்பீட்டு ஊழியர் சங்கமும் அது முன்னெடுக்கும் செயல்திட்டமும்… ஒரு பார்வை!

ஓய்வுபெற்ற காப்பீட்டு ஊழியர் சங்கம் (RIEA -Retired Insurance Employeees Association) சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

சென்னை அண்ணாநகர் டவர்ஸ் கிளப்பில் வெள்ளி விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

எல் ஐ சி நிறுவனத்திலிருந்து ஓய்வுபெற்ற நிர்வாக இயக்குநர் ஆர். பி.கிஷோர் இந்த சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர் மற்றும் ஓய்வுபெற்ற எல்.ஐ.சி ஊழியர்களின் நலனுக்காகப் போராடியவர். அவர் இந்த சங்கத்தின் பான் இந்திய பாதுகாவலராக இருந்து வழிநடத்துகிறார்.

தற்போதைய செயல் தலைவர் சீதாராமன் மற்றும் தலைவர் டி தலக்கியா.

RIEA ஓய்வுபெற்ற ஊழியர்களின் அனைத்து பிரிவுகளையும் கவனித்து வருகிறது, Class 1, Class 2, Class 3… அந்தந்த சென்னை பிரிவுகள் 1 & 2 மற்றும் மண்டல அலுவலகம்.

வருடத்திற்கு இரண்டு முறை 3 நாள் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்து நடத்துகிறார்கள்.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டங்களை நடத்தி, முக்கியப் பிரச்சினைகளை விவாதித்து, ஆலோசித்து முடிவெடுக்கிறார்கள்.

உறுப்பினர் காலமானால் அவர்களது குடும்ப ஓய்வூதியத்தைப் பெறுவதை உறுதிசெய்கிறார்கள்.

சமீபத்தில் குடும்ப ஓய்வூதியம் 15 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நிர்வாகத்துடன் இணைந்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பிரதிபலிப்பாக மேற்கண்ட செயல்பாடுகள் தொடர்கின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here