அரசுப் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் வாழ்வியல் வேறுபாட்டை எடுத்துக் காட்டும் ‘ரங்கோலி’ படத்துக்கு அமேசான் பிரைமில் குவியும் பாராட்டு!

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் அரசுப் பள்ளியிலிருந்து உயர்தர தனியார் பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவான படம் ‘ரங்கோலி.’

‘மாநகரம்’, ‘தெய்வத்திருமகள்’ படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இந்த படம் மூலம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். ‘ஆடுகளம்’ முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா உள்ளிட்டோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது எளிமையான ஒரு குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக எடுத்துக் காட்டும் விதத்தில் உருவாகியிருந்தது.

‘கோபுரம் ஸ்டுடியோஸ்’ கே.பாபு ரெட்டி & ஜி.சதீஷ்குமார் தயாரித்த இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து, அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இந்த படம்கடந்த அக்டோபர் 24; 2023 அன்று அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி குடும்பப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – சுந்தரமூர்த்தி கே எஸ்
ஒளிப்பதிவு – ஐ மருதநாயகம்
எடிட்டிங் – ஜி.சத்யநாராயணன்
கலை இயக்கம் – ஆனந்த் மணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here