விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, யோகிபாபு, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘ரோமியோ.’
யூடியூப் சீரிஸ் ‘காதல் டிஸ்ஷன்சிங்’, ‘ஐ ஹேட் யூ, ஐ லவ் யூ’ மூன்றாவது எபிசோட் மூலம் புகழ் பெற்ற விநாயக் வைத்தியநாதன் இயக்கியுள்ள இந்த படத்தை, தரமான படங்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வெளியிடும் ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ நிறுவனம் வருடம் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளது.
‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படம் தெலுங்கில் ‘லவ் குரு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது.
உருவாக்கத்தில் உறுதுணை:
‘பத்துதல’ படத்தின் அட்டகாசமான காட்சியமைப்புக்காக பாராட்டப்பட்ட ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பரத் தனசேகர் இந்த படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
எஸ் கமல நாதன் கலை இயக்குநராகவும், விஜய் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.