நடிகர் ராம் பொதினேனி, இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் வாழ்த்துகளோடு ‘ராமம் ராகவம்’ படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு!

சமுத்திரக்கனி நடித்து, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கும் படம் ‘ராமம் ராகவம்.’

தெலுங்கு நடிகர் தன்ராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் சமுத்திரகனியோடு தன்ராஜ் கோரனானி, ஹரிஷ் உத்தமன், சுனில், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ப்ருத்விராஜ், ராக்கெட் ராகவா, ரச்சா ரவி, இந்தூரி வாசு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு ஹைதராபாத், அமலாபுரம், ராஜமுந்திரி, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இன்றைய காதலர் தினத்தையொட்டி, இந்த படத்தின் முதல் காட்சியை சமூக வலைதளங்கள் வழியாக தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வெளியிட்டு, படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

 

பிரபல இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு, தன்ராஜ் பிஸியான நடிகராக இருந்தும் இயக்குநராக தனது திறமையை வெளிப்படுத்தி, நல்ல கதையை திரைப்படமாக்கியுள்ளார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலுள்ள உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் இந்த படம் பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.

படக்குழு:
தயாரிப்பாளர்: பிருத்வி போலவரபு
வழங்குபவர்: பிரபாகர் ஆரிபகா
கதை: சிவபிரசாத் யானலா
வசனம்: மாலி
இசை: அருண் சிலுவேரு
பாடல்கள்: ராமஜோகய்யா சாஸ்திரி,
டிஓபி: துர்கா பிரசாத் கொல்லி
எடிட்டர்: மார்த்தாண்டன் கே வெங்கடேஷ்
கலை: டெளலூரி நாராயணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here