Home சினிமா பாகிஸ்தான் ராணுவ வீரனை சுட்டுக்கொல்ல உத்தரவு… இந்திய ராணுவ வீரன் சக்திவேல் என்ன செய்கிறான்? பரபரப்பான...

பாகிஸ்தான் ராணுவ வீரனை சுட்டுக்கொல்ல உத்தரவு… இந்திய ராணுவ வீரன் சக்திவேல் என்ன செய்கிறான்? பரபரப்பான கதையில் உருவான ‘ராயல் சல்யூட்’ விரைவில் ரிலீஸ்!  

ஜெய் சிவசேகர் இயக்கத்தில், மகிழ் மூவி மேக்கர்ஸ் சிவ கணேஷ் தயாரித்துள்ள படம் ‘ராயல் சல்யூட்.’

நேர்மையான ராணுவ வீரன் வீரன் சக்திவேல் எல்லைப் பகுதியில் மாட்டிக்கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ரு சக்திவேலை காப்பாற்றுகிறான். ஒரு சூழலில் இந்திய ராணுவ வீரர்கள் வசம் பக்ரு மாட்டிக்கொள்ள பக்ருவை சுட்டுக்கொள்ள உயரதிகாரி சக்திவேலுக்கு உத்தரவிடுகிறார். சக்திவேல் தன்னை தானே சுட்டுக் கொள்கிறான். இப்படி பரபரப்பான கதையில் தயாராகியுள்ள ராயல் சல்யூட் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

படத்தில் புதுமுகங்கள் பிரதீப், யுவராஜ், சுபாஷ் சிம்பு, எம்ஜிஆர் இன்பா, ஜனனி ஆகியோர் நடித்துள்ளனர்.

கணேஷ் முத்தையா படத்தின் போர் காட்சிகளை மிக நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் கிஷன் இசையமைக்க, ஆர் கே விஜய் எடிட்டிங் பணிகளைச் செய்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்