Home சினிமா ஏழு ஆண்டுகள் கழித்து திரையுலகுக்கு திரும்பிய ரமீஸ் ராஜா… ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் பிரமாண்ட படம்...

ஏழு ஆண்டுகள் கழித்து திரையுலகுக்கு திரும்பிய ரமீஸ் ராஜா… ஹாரர் திரில்லர் சப்ஜெக்டில் பிரமாண்ட படம் தயாரித்து நடிக்க தயாராகிறார்!

நடிகரும் தயாரிப்பாளருமான ரமீஸ் ராஜா ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தனக்குப் பிடித்த சினிமா உலகிற்குள் மீண்டும் தயாரிப்பாளராகவும், கதாநாயகனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வருகிறார். அதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

அது பற்றி பேசிய ரமீஸ் ராஜா ”இன்றைய சூழ்நிலையில் மக்களிடையே ஹாரர், திரில்லர் படங்களுக்குதான் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதனால்தான் அடுத்த படத்தையும் ஹாரர் படமாக உருவாக்க அதற்கான கதை டிஷ்கஷன் நடந்துக் கொண்டிருக்கிறது நடிகர், நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வும் நடந்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் புதுவிதமான கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறேன். மிகுந்த பொருட்செலவில் வித்தியாசமான கதையமைப்போடு அனைவரையும் கவரும் விதத்தில் நானே தயாரிக்கிறேன்

டார்லிங் – 2, விதிமதி உல்டா போன்ற படங்களுக்கு உங்களது ஆதரவை அளித்ததைப்போல் தொடர்ந்து இப்போது தயாராகி வரும் புதிய படத்திற்கும் ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

ரமீஸ் ராஜா டார்லிங் – 2 ஹாரர் காமெடி படத்தையும் விதிமதி உல்டா திரில்லர் படத்தையும் தயாரித்து கதாநாயகனாகவும் நடித்து தமிழ்த் திரையுலகிற்கு புதிய கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர். அவருடன் இரண்டு படங்களிலும் இணைந்து நடித்த நடிகர் நடிகையர்கள் கலையரசன், காளி வெங்கட், கருணாகரன், சென்றாயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தன், மாயா, ஜனனி ஐயர் ஆகியோர் நடித்திருந்தார்கள். டார்லிங் – 2 படத்தை ஞானவேல்ராஜாவின் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டிருந்தது.

விதிமதி உல்டா வெளியான பிறகு ஏற்பட்ட தோல்வியால் பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டு திரையுலகைவிட்டு விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் அந்தப் பிரச்சனைகளுக்கு இடமளிக்காமல் தன்னம்பிக்கையுடன் சொந்த தொழில் தொடங்கி தொழிலதிபரானார். தொடங்கிய SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPESIALISED ROOFINGS PVTLTD நிறுவனம் இன்று அஸ்பால்டிக்ரஃபிங் உற்பத்தியில் தனித்துவமான மோனோபோலி நிறுவனமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது.

SKYLANES மற்றும் LIGHT WEIGHT RR SPECIALISED ROOFINGS PVTLTD நிறுவனத்தை பிரபலமான நிறுவனமாக நிலைநிறுத்திய பிறகு மீண்டும் சினிமாவிற்கு திரும்பிவருகிறார் ரமீஸ் ராஜா.

அவர் தனக்கு அனுபவம் கற்றுத் தந்த பாடம் பற்றி பேசும்போது ”இன்று வாய்ப்புத் தேடி வருகின்றவர்கள் முதலில் தனக்கென்று ஒரு தொழிலை அடிப்படையாக உருவாக்கிக் கொண்டு அதன் பிறகு வந்தால் இந்தத் திரையுலகில் எப்படிப்பட்ட பிரச்சனைகள் தோல்விகள் வந்தாலும் அதை எதிர்த்து போராடி வெற்றிபெற முடியும்.

சினிமா எனது ஆர்வம் ஆனால் அதோடு சேர்த்து தொழிலையும் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் புரிந்துக்கொண்டேன். தொழில் வேறு; ஆர்வம் வேறு. இது தான் விதிமதி உல்டா திரைப்படம் மூலம் காலம் எனக்கு கற்பித்த பாடம்.

எதிர்கால இளம் திறமையாளர்களுக்கு என் அறிவுரை கனவைத் தொடர்ந்து சாதிக்க முயற்சி செய்யுங்கள். ஆனால் அதேசமயம் வாழ்க்கைக்கு ஒருவலுவான அடித்தளத்தையும் உருவாக்கிக்கொள்ளுங்கள் என்பதுதான்” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்