ஆர் ஜே பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டம்… அசத்தலான போஸ்டரில் வெளியான புதிய பட அறிவிப்பு!

ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய பட அறிவிப்பு பிரத்யேக போஸ்டர் மூலம் அவரது பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. தற்காலிகமாக ‘புரொடக்சன் நம்பர் 3’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை,  ‘குட் நைட்’, ‘லவ்வர்’ என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கின்றன.

ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வழங்கி வரும் தயாரிப்பாளர்களும், ஃபேமிலி என்டர்டெய்னர் ஜானரிலான திரைப்படங்களை தொடர்ந்து அளித்து வரும் நடிகர் ஆர். ஜே. பாலாஜியும் இணைந்திருப்பதால், இவர்களின் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படமும் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் தெரியவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here