கிளாப் அடிக்க சிவகார்த்திகேயன், ரோலிங் சொல்ல சூரி, ஆக்ஷன் சொல்ல இயக்குநர் லோகேஷ் கனகராஜ்… உற்சாகமாய் துவங்கிய ரியோராஜ் நடிக்கும் புதிய படம்! 

ரியோராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது.

படப்பிடிப்பு நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, நடிகர் சூரி ரோலிங் சொல்ல, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆக்சன் சொல்ல இனிதே தொடங்கியது.

படத்தில் இறுகப்பற்று, சொர்க்கவாசல் படங்களின் நாயகி சானியா ஐயப்பன் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் அஜூ வர்கீஸ் , சிங்கம்புலி,மிர்ச்சி விஜய், கார்த்திகா. உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த கார்த்திகேயன் பி கே இந்த படத்தினை இயக்குகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவரும் திரைப்படமாக உருவாகிறது.

திபு நிநான் தாமஸ் இசை அமைக்கிறார். பிரவீன் போத்தன் பட ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். அறிமுக கலை இயக்குநராக பிரதீப் ராஜ் பணிபுரிகிறார். உடை வடிவமைப்பை பிரியா ரவி செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here