எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படமாக உருவானது! ஆஹா ஓடிடியில் விரைவில் ரிலீஸ்!

எழுத்தாளர் ஜெயமோகனின் கதை ‘ரத்தசாட்சி’ என்ற திரைப்படமாக உருவானது! ஆஹா ஓடிடியில் விரைவில் ரிலீஸ்!
பிரபல எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான ஜெயமோகனின் சிறுகதைகளில் ஒன்று ‘கைதிகள்.’

இந்த கதையை திரைப்படமாக உருவாக்க பிரபல தமிழ் இயக்குநர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுகதையை (தழுவி) ஆஹா தமிழ் ஓடிடி தளமும் மகிழ் மன்றமும் இணைந்து திரைப்படமாக தயாரித்துள்ளனர்.

 

படத்திற்கு ரத்தசாட்சி’ என தலைப்பிட்டுள்ளனர். ரஃபீக் இஸ்மாயில் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜாவேத் ரியாஸ் இசையமைக்க, ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? இந்த கேள்விகளுக்கு பதில்தான் கதையின் போக்கு.

அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்த படத்தை ‘ஆஹா தமிழ் OTT’ தளம் விரைவில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

படம் பற்றி ஜெயமோகன், ”ரஃபிக் இஸ்மாயில் என்னும் இயக்குநர் என்னை அணுகி கைதிகளை திரைப்படமாக்க விரும்பினார். இந்த சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் இயக்குநர் மணிரத்னம் இந்த கதையை திரைக்கு மாற்ற நினைத்தார். கதையின் உரிமையைப் பெற இயக்குனர் வெற்றிமாறன் என்னை அணுகினார். கதை ஏற்கனவே ரஃபிக்கிடம் கொடுக்கப்பட்டதாக அவர்களிடம் தெரிவித்தேன்” என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகன் திரைப்படங்கள் பலவற்றுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிவருபவர். சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் கதை அவருடையது என்பதும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் வசனங்களை எழுதியதும் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது!

ஆஹா தமிழ் OTT தளம் பற்றி:-
AHA 100% தமிழ் என்டர்டெயின்மென்ட் OTT பிளாட்ஃபார்ம், பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் (ஜிவி 2, குருதி ஆட்டம், மாமனிதன், கூகுள் குட்டப்பா, மன்மத லீலை, ரைட்டர் ) மற்றும் பல்வேறு வகைகளான வெப் தொடர்களின் மூலம் தமிழ் மக்களின் இதயங்களை வென்று வருகிறது. (பேட்டைக்காளி, அம்முச்சி 2, ஈமோஜி, அன்யாஸ் டுடோரியல், ஆகாஷ் வாணி, இரை) இவை அனைத்து ஒரு நாளைக்கு வெறும் ரூ.1 மட்டுமே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here