இசையமைப்பாளர் ஜான் ஏ. அலெக்ஸிஸ் தனியிசைக் கலைஞராகவும், திரையிசைக் கலைஞராகவும் தனது திறமையால் கவனம் ஈர்த்து வருகிறார்.
தற்போது இவரின் இசையமைப்பில் ‘ரிப ரிப‘ என்ற புதிய தனியிசைப் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை எழுதி, இசையமைத்து, பாடியுள்ளார் ஜான்அலெக்ஸிஸ். அந்த பாடல் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரையைச் சார்ந்த ஜான் அலெக்ஸிஸ் தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவர். ஆங்கிலச் சொற்களோடு தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி அதை உலக அரங்கில் கொண்டுசேர்க்கவும், உலக அரங்கில் தமிழ் மொழிக்கும், தமிழிசைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பாடல்கள் இயற்றுவதையும் நோக்கமாக கொண்டு செயல்படுபவர்!