மாரி செல்வராஜ் இயக்கும் ‘வாழை‘ படத்தின் படப்பிடிப்பை இன்று நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.
தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘மாமன்னன்’ படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், தனது நான்காவது படைப்பாக ‘வாழை’ படத்தை அவரே தயாரித்து இயக்குகிறார்.
சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.
தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படக்குழு:-
இசை – சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர்
கலை இயக்கம் – குமார் கங்கப்பன்
படத்தொகுப்பு – சூரிய பிரதமான்
சண்டைப்பயிற்சி – திலீப் சுப்பராயன்
நடனம் – சாண்டி
பாடல்கள் – யுகபாரதி, வெயில் முத்து
உடை வடிவமைப்பு – ஶ்ரீ ஸ்வர்ணா
ஒலி வடிவமைப்பு – சுரேன் G
ஸ்டில்ஸ் – ஜெய்குமார் வைரவன்
உடைகள் – ரவி தேவராஜ்
மேக்கப் – R கணபதி
விளம்பர வடிவமைப்பு – கபிலன் செல்லையா
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – வெங்கட் ஆறுமுகம்
தயாரிப்பாளர் – திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்