சென்னையிலிருக்கும் தனது தொழிற்சாலையிலிருந்து நடிகை ரம்பாவின் உற்சாக போட்டோக்கள்!

ரம்பாவுக்கு சொந்தமான தொழிற்சாலை சென்னையில் இருக்கிறது. அங்கு அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியாகி இருக்கிறது.

நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் 2010ல் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.

ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். கிட்சன் உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தான் அது.

சமீபத்தில் ரம்பா அவரது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்று இருக்கிறார். அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார்.

செய்தித் தொகுப்பு: ராமு சரவணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here