ராகவா லாரன்ஸும் அவருடைய சகோதரர் எல்வினும் இணைந்து நடிக்கும் புதிய படம் ஆக்ஷன் திரில்லராக தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.
‘ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ கதிரேசன் தயாரிக்கும் இந்த படத்தை இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். ஆர். சுந்தராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே பி ஒய் வினோத், விஜே தணிகை, சென்றாயன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
15.7. 2023 அன்று தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடக்கவுள்ளது.
படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் இன்னாசி பாண்டியன், “இது முழு நீள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம். இந்த கதையைத்தான் நான் எனது முதல் படமாக இயக்கவிருந்தேன், ஆனால், ஒருசில காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே இதை எனது இரண்டாவது படமாக இயக்குகிறேன். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தயாரிப்பாளர் கதிரேசன் அவர்களுக்கு நன்றி” என்றார்.
ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் தயாரித்து இயக்கிய ‘ருத்ரன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. கதிரேசன் தயாரித்து இன்னாசி பாண்டியன் இயக்கி, அருள்நிதி நடித்த ‘டைரி’ திரைப்படமும் வெற்றி பெற்றது. அவற்றைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ், இன்னாசி பாண்டியனுடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
இசை – சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு – ‘டிமான்டி காலனி’, ‘டைரி’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்
படத்தொகுப்பு – வடிவேலு விமல்ராஜ்
சண்டை பயிற்சி – பேண்ட்டம் பிரதீப்
பாடல்கள் – ஞானகரவேல்
வசனம் – இயக்குநர் இன்னாசி பாண்டியன் & ஞானகரவேல்
கலை இயக்கம் – ராஜு
உடைகளை வடிவமைப்பு – ஷேர் அலி
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்