‘தாமிரபரணி’, ‘பூஜை’க்குப் பின் விஷால் – இயக்குநர் ஹரி கூட்டணி மீண்டும் இணையும் புதிய படம் பூஜையுடன் துவக்கம்!

நடிகர் விஷால் – இயக்குநர் ஹரி இருவரும் இணைந்து ‘தாமிரபரணி’, ‘பூஜை’ என இரண்டு சூப்பர் ஹிட் படங்களைத் தந்தவர்கள். அவர்கள் இருவரும் மீண்டும் இணைகிற புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. அவர்களின் பங்களிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் இன்று தொடங்கியது. நிகழ்வில் படக்குழுவினரோடு திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் காட்சிகள் சென்னை, தமிழ்நாட்டின் தென் பகுதிகள், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்படவுள்ளது,

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய விறுவிறுப்பான படங்களைத் தொடர்ந்து வழங்கிவருகிற இயக்குநர் ஹரியும், ஆக்ஷன் படங்களில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் விஷாலும் மீண்டும் இணைவதால் படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ்’ மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சவுத் நிறுவனங்கள் அலங்கார் பாண்டியன் மற்றும் கல்யாண் சுப்பிரமணியம் உடன் இணைந்து இந்த படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கின்றன.

படத்தின் கதாநாயகி உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

படக்குழு:-
இசை – தேவிஸ்ரீ பிரசாத்
பாடல்கள் – விவேகா
ஒளிப்பதிவு – எம். சுகுமார்
படத்தொகுப்பு – டி.எஸ். ஜெய்
கலை – காளி பிரேம்குமார்
சண்டைப் பயிற்சி – திலீப் சுப்பராயன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here