தென்னிந்திய சினிமாவில் மாடர்ன் மற்றும் நகர்ப்புற வேடங்கள் இரண்டுக்கும் பொருந்தக்கூடிய நடிகை ரிது வர்மா.
தெலுங்கில் ‘பெல்லி சூப்புலு’ படத்தின் மூலம் கவனத்தைத் திருடியதில் இருந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் தமிழ் மக்களைக் கவர்ந்தது வரை, ரிது வர்மா ஒரு சிறந்த நடிகையாக தன்னை நிரூபித்துள்ளார்.
தற்போது, நடிகை ரிது வர்மா, விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஓகே ஓக ஜீவிதம் (தெலுங்கு)- கானம் (தமிழ்) என்ற இருமொழித் திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.
தவிர, இவர் அசோக் செல்வனின் நித்தம் ஒரு வானம் (தெலுங்கில் ஆகாசம்) படத்திலும் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரிது வர்மா விரைவில் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.