மெத்தையில் முட்டையை வைத்து அதன் மீது படுத்தால் முட்டை உடைவதில்லை; முட்டையை மெத்தை உள்வாங்கிக் கொள்கிறது. அந்தளவுக்கு ரிபோஸ் மெத்தைகளின் SmartGRID ஹைப்பர் – எலாஸ்டிக் பாலிமர் தொழில்நுட்பம் மிகமிக மிருதுவாக இருக்கிறது. அதனை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிரூபித்துக் காட்டியது இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் ஹைலைட்!
ரிபோஸ் மெத்தைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் மெத்தை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதற்கு, கோவை, பூனா, மீரட் ஆகிய நகரங்களில் ஆலைகள் உள்ளன. 400 பணியாளர்களோடு, இந்தியா முழுதும் 1,500 விற்பனை முகவர்களோடு இயங்கி வரும் ரிபோஸ் நிறுவனத்தின் கடந்த நிதியாண்டு விற்றுமுதல் (டர்ன் ஓவர்) 103 கோடி ரூபாய் ஆகும்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய ரிபோஸ் மெத்தைகள் நிறுவனத்தின் தலைமை விற்பனை அலுவலரான திரு. வி. பாலாஜி, “தற்போது தென் இந்திய சந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வரும் ரிபோஸ், வட இந்தியாவிலும் விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தில்லி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் காலூன்றி, 200 விற்பனை முகவர்களை நியமிப்பதே எங்களது நோக்கம்.
ஒடிஷாவின் புவனேஸ்வர் நகரத்தில் மற்றொரு உற்பத்தி ஆலையை அமைப்பதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம்.
இந்த நிதியாண்டில் எங்கள் டர்ன் ஓவரை 200 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்துவதே எங்கள் இலக்கு.
தமிழ்நாட்டில், எங்கள் விற்பனையை 30 கோடி ரூபாயில் இருந்து 60 கோடி ரூபாயாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தற்போதுள்ள 400 முகவர்களின் எண்ணிக்கையை 600 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்,” என்றார்.
மேலும், “எங்களது பிராண்டு அம்பாசிடராக டான்ஸ் சூப்பர் ஸ்டார் நடனப் புயல் பிரபு தேவா அவர்களை ஒப்பந்தம் செய்துள்ளோம். அவருக்கு நாடெங்கும் ரசிகர்கள் உண்டு. அவருடைய ஆளுமையைப் பயன்படுத்திக்கொண்டு, ரிபோஸ் இந்திய அளவிலான மெத்தைகள் பிராண்டாக உயர திட்டமிட்டுள்ளது. அவரை மையப்படுத்திய தொலைக்காட்சி மற்றும் வலைதள விளம்பரங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளோம்.” என்று கூறினார்.
‘புதுமை கருத்துகளுக்கு வரவேற்பு கொடுங்கள்’ (வேக் அப் டு ஃப்ரெஷ் ஐடியாஸ்) என்ற பிராண்டு தத்துவத்தின்படியும் புதுமையான மெத்தைகளை உற்பத்தி செய்யும் திட்டத்தின் படியும், சந்தையை மேலும் விரிவாக்குவதற்காகவும், ரிபோஸ் தற்போது, ஸ்மார்ட்கிரிட் மெத்தைகள் என்ற புதிய வகை மெத்தைகளை அறிமுகம் செய்துள்ளது.
இதைப் பற்றி, ரிபோஸ் மெத்தைகள் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துணைத் தலைவர் திரு. ரவி பண்டித் கூறும்போது “மிக நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு, ஹைப்பர் – எலாஸ்டிக் பாலிமர் பொருட்களைக் கொண்டு ஸ்மார்ட்கிரிட் மெத்தைகள் தயார் செய்யப்படுகிறது. ‘கம்பர்ட் தொழில்நுட்பம்’ என்ற துறையில் இது மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும்” என்றார்.
ஸ்மார்ட்கிரிட் தொழில்நுட்பத்தின் பயன்கள்:-
இந்த மெத்தைகள், உடற் பகுதிகளில், எங்கு மெத்தென்று இருக்கவேண்டுமோ அங்கே மெத்தென்று இருக்கும்; எங்கு அழுத்தத்துடன், உறுதியாக இருக்கவேண்டுமோ, அங்கே உறுதியாக இருக்கும். உதாரணமாக, தோள்கள் மற்றும் இடுப்புப் பகுதிகளில் மெத்தென்று இருக்கும். முதுகு பகுதியில் உறுதியுடன் இருக்கும். இந்த மெத்தைக்குள் 2,500க்கு மேற்பட்ட காற்றுத் துளைகள் உள்ளன. அதனால், வெப்பநிலையை சமச்சீராக வைத்திருப்பதுடன், மெத்தையை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உறங்கும்போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப, ஸ்மார்ட்கிரிட் உடனடியாக மாறிக்கொள்ளும். அதனால், எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் தூக்கத்தைத் தொடர முடியும். இந்த மெத்தை நீடித்து உழைக்கக்கூடியது. காலவோட்டத்தில் தொய்ந்து போய்விடாது. முதல்நாள் எப்படி இருந்ததோ, அப்படியே நீண்டகாலம் இருக்கும்.