ரீமிக்ஸாக ‘வீரத்திருமகன்’ படத்தின் பாடல்… ‘ருத்ரன்’ படத்தில் அசத்தல்!

ராகவா லாரன்ஸ் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் ருத்ரன்.’ பல வெற்றிப் படங்களை தயாரித்த 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் தயாரித்து இயக்கும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நாள் முதலே பலரின் கவனத்தை ஈர்த்தது.

இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டும் வகையில் வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற பிரபல பாடலான ‘பாடாத பாட்டெல்லாம்’ பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர்.

ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டில் இப்பாடலின் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்பாடலுக்கு நடன இயக்குனராக ஶ்ரீதர் பணியாற்றியுள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் தொழில் நுட்பக் குழு:
தயாரிப்பு –  5 Star கிரியேஷன்ஸ்
இசை – G.V.பிரகாஷ்
ஒளிப்பதிவு – R.D.ராஜசேகர்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
கதை, திரைக்கதை – K.P.திருமாறன்
இயக்கம் – 5 ஸ்டார் S.கதிரேசன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here