‘கட்டம் சொல்லுது‘ சினிமா விமர்சனம்
By சு.கணேஷ்குமார்,99415 14078
நேரம், காலம், ஜோஸியம்… ஜாதகம், தோஷம் பரிகாரம்… கலந்து கட்டி ஒரு கதை. காமெடி கலாட்டாவா திரைக்கதை. படத்துக்கு பேரு ‘கட்டம் சொல்லுது.’ படத்த பார்த்த நம்ம மனசு என்ன சொல்லுது? வாங்க பாத்துடுவோம்…
தீபா சங்கர் தெரியும்ல, அதாங்க, நெறயப்பேரு தீபா அக்கானு செல்லங்கொஞ்சுற நடிகை. அவங்க, அவங்களோட மவளுக்கு கல்யாணத் தேதி குறிச்சு பந்தல்காரங்கள்லேருந்து பந்தி பரிமாறுறவங்க வரைக்கும் அட்வான்ஸ் கொடுத்துக்கிட்டு வர்றாங்க. சரி, அவங்க மவளக் கட்டிக்கப்போற மாப்பிள்ளை யாருன்னு விசாரிச்சா ‘இனிதான் பார்க்கணும்’னு குண்டக்க மண்டக்க குண்டத் தூக்கிப் போடுறாங்க. கட்டம் சொன்னத நம்பித்தான் கல்யாண ஏற்பாடாம். மாப்பிள்ளையே பாக்கலையாம்; மண்டபம் ரெடியாம். அட கதை கொஞ்சம் புதுசா இருக்குல்ல. கதை மட்டுமில்லை, திரைக்கதையும் சுவாரஸ்யம்தான்…

‘திட்டம் போட்டு எறங்கிருக்கோம்; நாங்க மொத்தபேரும் புதுமுகங்க’னு கெளம்பிவந்து தன்னோட மொத சினிமாவை சிரிமாவா கொடுத்திருக்காப்ல காரைக்கால சேர்ந்த கனத்தபுள்ளை எஸ்.ஜி. எழிலன். படத்தோட ஹீரோவும் அவரேதான்.
அந்த ஹீரோ கட்டம் சரியில்லாத மனுஷன். ஐயோ பாவம்.. பாக்குறபோல்லாம் அவங்க அப்பாரு செவுள்ல அறையுற அறையில அந்த கருத்த புள்ளையோட கன்னமெல்லாம் செவந்துபோவுது. மனசுக்குப் பிடிச்சவகிட்ட ஒரு முத்தம் வாங்கிடணும்னு மொத்த வித்தையும் எறக்கிப் பாக்குறாரு. அனா, ‘நடக்குறதெல்லாம் தாறுமாறு, கூட சுத்துற கூட்டாளியெல்லாம் தண்டச்சோறு’ன்னு அவரோட வாழ்க்கையில விதி பண்றதெல்லாம் சதிதான்.
விதியை வீழ்த்தினாரா? சதிக்கு சமாதி கட்டினாரா? கதையோட கடைசிவரை கலகலப்புக்கு பஞ்சமில்லை. ஆறுதலா ஒரு சங்கதி அடிதடி, குடிவெறி, ஆபாசம்னு அருவருப்பா எதுவுமில்லை.

எல்லாருமே (தீபாசங்கர் தவிர) புதுமுகம்னாலும் கேரக்டருக்கு ஏத்தபடி பொருத்தமான ஆசாமிகளா புடிச்சுப் போட்டது, அத்தனைப் பேரையும் இயல்பா நடிக்க வெச்சது, ‘பாதை இல்லைனு பதறாத, இறங்கி நடந்தா வழி பொறக்கும்’னு மோட்டிவேஷன் பண்றது, ‘வாழ்க்கையில உசந்தபிறகு இல்லாதவனுக்கு உதவு’ன்னு அட்வைஸ அள்ளிவிடுறதுன்னு அறிமுகப் படத்துலேயே அதகளம் பண்ணிருக்காப்ல இயக்குநர் எழிலன். ஹீரோவா அவரோட பங்களிப்பு கதைக்கேத்த கலகலப்பு!
தடியனா வர்றாப்ல ஒரு தம்பி, அவரோட நெசப்பேரு திடியனாம். அசட்டுதனத்துல அசத்துறாரு. எதிர்காலத்துல காமெடியனா பொழச்சுப்பாப்ல!
படத்துல ‘ஆபரேஷன் கறுப்பு ஆடு’ன்னு ஒரு சமாச்சாரம் வருது. துக்கத்துல இருந்தாகூட சிரிச்சிடுவீஙக: ஜாக்கிரதை!
மியூஸிக், எடிட்டிங், சினிமாடோகிராபின்னு இன்னபிற சங்கதியெல்லாம் அம்சமா பொருந்தியிருக்கு.
படத்துல குறை கிறை கிடையாதான்னுதானே கேக்குறீங்க? இயக்குநருக்கு இது முதல் படம். லோ பட்ஜெட் வேற… கொஞ்சம் அப்படி இப்படி இருக்குறது சகஜம்தான். ஜாம்பவான்கள் எடுக்கிற படங்களே கேலிக்கூத்தா இருக்கு. அதையெல்லாம் நெனச்சுப் பாருங்க. கட்டம் சொல்லுதெல்லாம் கற்கண்டுங்க!
படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்:
Written & Directed by S.G.EzhilanProduced by Kanna Ganesan Productions
Co Producers – Raja Ayyapan, “Pudhvai” R.R. Karthikeyan
Cinematography – J. Sabarish BSc, D.F.Tech
Music – Tamim Ansari
Editing – Vijay Velukutty
Art Director – Praveen UC, MFA, Sanarthanan S, MFA
Sound Mix – M.R.Rajakrishnan
Dubbing Engineer – Venkatapari Natarajan
Colourist – Karthik.V
Associate Director – “Pudhvai” R.R. Karthikeyan
PRO – Sathish (AIM)