லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்ட 5 இளம் திறமையாளர்களுக்கு ஐடிசி சன்ஃபீஸ்ட் ‘சூப்பர்கிட்ஸ் விருது.’ நடிகை சினேகா வழங்கி ஊக்குவிப்பு!

தமிழகம் முழுவதுமுள்ள இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க் நிறுவனத்தின் இந்தாண்டுக்கான ‘சூப்பர்கிட்ஸ் விருது’ ஐந்து பேருக்கு வழங்கப்பட்டது.

ITC சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க்கின் பிராண்ட் எண்டோர்சர் நடிகை சினேகா பிரசன்னா, ITC லிமிடெட் உணவுப் பிரிவின் பிஸ்கட் & கேக்ஸ் பிரிவின் தலைமை இயக்கு அதிகாரி அலி ஹாரிஸ் ஷேர் இருவரும் மேற்குறிப்பிட்ட விருதுகளை வழங்கினர்.

இந்த நிகழ்வின் போது, சாதனையாளர்கள் தங்கள் சாதனைப் பயணத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு மேடை வழங்கப்பட்டது. அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், அர்ப்பணிப்பு மற்றும் தங்கள் கனவுகளைத் தொடர என்ன தேவைபட்டது என்பதைப் பற்றி ஆர்வத்துடன் பேசினர். வெற்றியை அடைவதில் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் வளர்ச்சி மனப்பான்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விருது பெற்றவர்கள் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு வலுவான அடித்தளத்தை வழங்கிய பெற்றோர்களின் சிறந்த வளர்ப்பை சூப்பர்கிட்ஸ் சுட்டிக்காட்டினர்.

விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள்:-

டோம்மராஜு குகேஷ், ஒரு இளம் செஸ் வீரர். வரலாற்றில் இளம் கிராண்ட்மாஸ்டர்களில் ஒருவராக இவர் அறியப்படுகிறார். ஜனவரி 2019-இல், குகேஷ் 12 வயது, 7 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றார். கடந்த ஆண்டு மார்ச் மாதம், குகேஷ் 2700 ELO-ரேட்டிங் மார்க்கை முறியடித்த ஆறாவது இந்தியர் ஆனார், மேலும் இவர் இந்தியாவின் 2700-க்கு மேல் மதிப்பிடப்பட்ட இளம் கிராண்ட்மாஸ்டர் ஆனார். கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 9/11 என்ற சாதனைப் புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றதற்காக, ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பு (ACF) சமீபத்தில் அவருக்கு வழங்கியது.

லிடியன் நாதஸ்வரம், சென்னையைச் சேர்ந்த ஒரு இளம் இந்திய இசைக்கலைஞர். இவர் 20-க்கும் மேற்பட்ட இசைக்கருவிகளை வாசிக்கக்கூடியவர். 2019-ஆம் ஆண்டு CBS- இன் The World’s Best போட்டி சீசன் 1-இன் வெற்றியாளர் ஆவார். உலகெங்கிலும் உள்ள 185 நாடுகளில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர். லிடியன் கடந்த 5 ஆண்டுகளாக TED ஸ்பீக்கராக இருந்து வருகிறார். 2019-இல் இந்தியாவின் சிம்பொனி ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வாசித்த இளம் சோலோ பியானோ கலைஞர். அவர் மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் ஒரே ஒரு மாணவர். சாதனை தமிழன் விருது 2019, விகடன் விருது, இளம் மற்றும் வேகமான பியானோ கலைஞருக்கான இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.

பிரசித்தி சிங், ஒரு தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். தனது 10 வயதில், பிரதமரின் தேசிய குழந்தை விருது பெற்றவர் (18 வயதுக்குட்பட்ட மிக உயர்ந்த குடிமகன் விருது). இவர் பிரசித்தி வன அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார்.  India-by-India புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் இளம் ஃப்ரூட் ஃபாரஸ்ட் கிரியேட்டர். தமிழ்நாடு அரசின் “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” என்ற தேசிய அளவிலான பெண் கல்வியறிவு பிரச்சாரத்திற்கான பிராண்ட் தூதராகவும், பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின் குழந்தைத் தூதராகவும் உள்ளார். Biodiversity ஆதரவாளரான இவர், உலகம் முழுவதும் 36,000-க்கும் மேலான சுற்றுச்சூழல் போராளிகளைக் கொண்ட ஒரு Eco-army-ஐ உருவாக்கியுள்ளார். இரண்டு முறை TEDx பேச்சாளர், அதோடு ஹார்வர்ட் மாடல் ஐக்கிய நாடுகள் சபையின் இளம் முக்கிய பேச்சாளர் ஆவார். இப்போது அவர் Web3 காலநிலை தொழில்நுட்பம் மற்றும் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளில் பணிபுரிகிறார். அவர் பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் வென்றுள்ளார் – தி டயானா விருது, U.K (சமூக நடவடிக்கை மற்றும் மனிதாபிமான முயற்சிகளுக்கான மிக உயர்ந்த உலகளாவிய சிறப்புரிமை), குளோபல் சைல்ட் ப்ராடிஜி விருது ஆகியவை குறிப்பிடத்தக்கது.

வினிஷா உமாசங்கர், 11-ஆம் வகுப்பு மாணவி, கலைஞர், TEDx பேச்சாளர், இன்னோவேட்டர்  மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர். தனது கண்டுபிடிப்பு, சோலார் அயர்னிங் கார்ட் மூலம் நன்கு அறியப்பட்டவர். Earthshot பரிசு 2021 இறுதிப் போட்டியாளர் என்ற பெருமையை கொண்ட இளம் பள்ளி மாணவி ஆவார். கிளாஸ்கோவில் நடந்த UN காலநிலை மாற்ற மாநாட்டில் COP26-இல் பேசினார். உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில், அவரது ஐந்து நிமிட பேச்சு சமூக ஊடகங்களில் 30 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு வைரலாகியது. புதுமையின் மூலம் மாற்றத்தை வலியுறுத்துகிறவர் வினிஷா.

DR. K. ப்ரிஷா, மத்திய அரசாங்கத்தின் NCPCR சான்றளிக்கப்பட்ட உலகின் முதல் இளம் பார்வையற்ற யோகா ஆசிரியர் ஆவார். மேலும் 70 உலக சாதனைகள் புரிந்தவர், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர், யோகா சிகிச்சையில் உலகின் முதல் இளம் எழுத்தாளர் ஆகிய சிறப்புகள் இவரை சேரும். ப்ரிஷா மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கப் பதக்கம் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச யோகா போட்டிகளில் பங்கேற்று 200-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் ப்ரிஷா. குளோபல் சைல்டு ப்ராடிஜி விருது, அப்துல் கலாம் விருது, அன்னை தெரசா விருது, சிறந்த சாதனையாளர்கள் விருது போன்ற பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here