சமீபத்திய வெளியீடுகளில் கிடைத்த வரவேற்பு… அடுத்தடுத்த படங்களில் பிஸியான சாக்‌ஷி அகர்வால்!

ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துவருபவர் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால்.மூத்த இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி சமீபத்தில் வெளியான ‘நான் கடவுள் இல்லை’ படத்தில் முழு நீள ஆக்‌ஷன் அவதாரத்தில் அசத்தியிருந்தார். அதையடுத்து பிரபுதேவா கதாநாயகானாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சாக்‌ஷி அகர்வாலை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய கேட்டு வருகிறார்கள். வித்தியாசமான, மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே சாக்‌ஷி விரும்புகிறார்.

அவர் நடிப்பில் உருவாகியுள்ள பல திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன. அந்த படங்கள் குறித்த அடுத்தடுத்த விவரங்கள் தொடர்ந்து வெளிவரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here