டாக்டர் ஷீபா லூர்தஸ் தலைமையில் கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் இந்தியா அறக்கட்டளை ( UNITED SAMARITAN INDIA FOUNDATION ) சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, புத்தக வெளியீடு, கண் தான சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ‘ஒற்றுமைக்கான புது முயற்சி‘ (The Togetherness Initiative ) எனும் பெயரில் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 3-ம் தேதி மாலை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.
முன்னாள் மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ் தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு ஒருங்கிணைக்கும் இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு துணைத்தலைவர் சங்கர் நாகநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நடிகர் பப்லு பிருத்விராஜ், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகை ரேகா நாயர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ‘I AM TOUGH… BECAUSE I AM GOOD’, ‘MAGIC OF QUIET EGO’ எனும் இரண்டு உளவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
முகமது சதக் கலை & அறிவியல் கல்லூரிகள் ஆசான் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி ஆகிய நான்கு கல்லூரிகளைச் சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் தங்களுடைய கண்களை தானமாக பெறுவதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதற்கான சான்றிதழ் கல்லூரிகளுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தனித் திறமைகளால் ஜொலிக்கும் 25க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை கௌரவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.
டாக்டர் ஷீபா லூர்தஸ் இயக்கத்தில் உருவான ‘ எடனர்ல் கிஃப்ட் ‘ எனும் குறும்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ETERNAL GIFT என்கிற ஷார்ட் பிலிம் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளது.
மட்டுமல்லாமல் வருகை தந்த பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரமாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட வருவாய் துறை உயர் அதிகாரி பி சுபா நந்தினி, கண் மருத்துவ நிபுணர் டாக்டர் எம் ஆர் சித்ரா, தாம்பரம் மாவட்ட வருவாய்த் துறை உயர் அதிகாரி வி செல்வகுமார், முகமது சதக் கலை அறிவியல் கல்லூரியின் இயக்குநர் ஜனா எஸ் எம் ஏ ஜே அப்துல் ஹலீம், தமிழ்நாடு மாற்று திறனாளிகள் நல இயக்கத்தின் உறுப்பினரும் பேராசிரியருமான தீபக் நாதன், செங்கல்பட்டு மாவட்ட செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புலவர் ஆர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
#drsheeba. #drsheebaLourdhes
#UnitedSamaritansIndia #prosivakumar #sivaprfactory #Goldensheela
#AbdulKalamMemorialDay
#misstamilnadu #rekhanair #JamesVasanthan #bablooprithiviraj #ஓன்றுபட்டசமாரியர்கள்அமைப்பு
#MissSouthIndia #EternalGift
#MissSouthAsia
#டாக்டர்ஷீபாலூர்தஸ்
#CognitivePsychologist
#Personalitydevelopmenttrainer
#missbeautifuleyes
#MissBeautifulHair
#thetogethernessinitiative
#Mohamedsathakcollegeofarts&science
#AdanMemorialcollegeofarts&sciene
#Madraschristiancollege
#theQuaideMillethcollegeformen