எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழா 3.10.2023 இன்று நடந்தது.
விழாவில் 8513 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யூனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தை பிரபலப்படுத்தும் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர், பத்மஸ்ரீ விருது பெற்ற வைத்தியா ராஜேஷ் கோட்சாவிற்கும்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியும், தற்போது நிலவில் நிலை கொண்டிருக்கும் ‘சந்திராயன்-3’ செயற்கை கோளின் திட்ட இயக்குநருமான முனைவர் பி. வீரமுத்துவேல் ஆகியோருக்கு கௌர்வ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
எஸ்ஆர்எம் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார்.
உலக மருத்துவ கல்வி கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ரிக்கார்டோ லியோன் போற்கொஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டமளிப்பு உரை நிகழ்த்தினார்.