30 மில்லியன் ஃபாலோயர்ஸை பெற்று சாதனை படைத்த சன் டிவியின் யூடியூப் சேனல்! 

இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் சன் டிவியின் யூ டியூப் சேனல் தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்று, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.

https://www.youtube.com/@suntv

இந்த சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இதில் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.

இதற்கு மேலாக, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.

பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

இந்த சேனல் தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி பயணிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here